கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு


கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
x

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய Critical care Block-ஐ தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பகுதி, அதிநவீன சிகிச்சை பகுதி, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பகுதி, வெளி நோயாளிகள் பிரிவில் பாதம் பாதுகாப்பு மையம், பல் மருத்துவ பகுதி, மக்களை தேடி மருத்துவம், வெளி நோயாளிகள் பிரிவு, ரத்த வங்கி, எலும்பு முறிவு பகுதி, பொது மருத்துவம், கதிரியக்கப் பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் பகுதி, மெமோகிராம் ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் புதிதாக கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய Critical care Block-ஐயும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு Asiaforms Pvt.Ltd மூலம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான Lighting Board Asiaforms பெறப்பட்டது. அதற்கான நன்றி கடிதத்தை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கோவில்பட்டியின் சார்பாக மாவட்ட கலெக்டர் Asiaforms அலுவலரிடம் வழங்கினார். மேலும் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதி IDBI Bank சார்பாக ரூ.3 லட்சம் மதிப்பிலான Autoclave Machine-1, Stretcher-1, Wheel chair-1 ஆகியவை பெறப்பட்டது. அதற்கான நன்றி கடிதத்தையும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியின் சார்பாக மாவட்ட கலெக்டர் IDBI வங்கி கிளை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

இந்த ஆய்வில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) பிரியதர்ஷினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அலுவலர் (பொறுப்பு) அனுஜா ஜஸ்டின், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை I, செவிலியர் கண்காணிப்பாளர் நிலை II மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story