டிட்வா புயல்: விழுப்புரம் விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மீட்புக் குழுவினர் பேருந்துகள் மூலம் விழுப்புரம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
டிட்வா புயல்: விழுப்புரம் விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு
Published on

சென்னை,

டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தீவிர புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கனமழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையேம் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியத்தின் கோரிக்கையின்பேரில், மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து 150 பேர் கொண்ட 5 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தனி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் உடனடியாக அவர்கள் அனைவரும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் மூலம் விழுப்புரம் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் விழுப்புரம் மற்றும் கடலூரில் கனமழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com