டிட்வா புயல்: குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிட்வா புயல் குறித்து பொதுமக்களுக்கு, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.
டிட்வா புயல்: குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Published on

டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல் நாளை மாலை சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் கடற்கரைக்கு 25 கிலோ மீட்டர் வரை நெருங்கி வரும் என்றும், இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை காற்றின் வேகம் 80 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிட்வா புயல் குறித்து பொதுமக்களுக்கு, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது. அந்த குறுஞ்செய்தியில், "டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும். பொதுமக்கள் பலவீனமான கட்டிடங்கள் மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம்.

டிட்வா புயல் காரணமாக கனமழை ஏற்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தினால் ஒத்துழைக்கவும். மின் கம்பிகள், ஈரமான மின் சாதனங்களைத் தொடாதீர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com