‘தே.மு.தி.க. மாநாடு பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது’ - பிரேமலதா விஜயகாந்த்

கடலூர் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. சார்பில் நடத்தப்பட்ட மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் என நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநாட்டை மிக பிரம்மாண்ட வெற்றி மாநாடாக மாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது பாராட்டு. மேலும், தே.மு.தி.க. மாநாடு வெற்றி பெற்றதற்கு தொலைபேசி மூலமாகவும், சமூக ஊடகங்களிலும் வாழ்த்துக்கள் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






