5-ந் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த முறை (2021-ம் ஆண்டு) அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக, இந்த முறை இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை தேமுதிக தலைமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 5-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி? என்பது இறுதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? என்பது குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளதாம்.






