பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன - மு.வீரபாண்டியன்


பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன - மு.வீரபாண்டியன்
x

போதைப் பொருட்களின் புழக்கம் தமிழ்நாட்டில் நிலவுவதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகளே காரணம் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் போதைப் பொருட்கள், மது அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. மிகப்பெருமளவில் இளைஞர்கள் போதை மற்றும் மதுப் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். அம்மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.

போதைப் பொருட்களின் புழக்கம் தமிழ்நாட்டில் நிலவுவதற்கும் பாஜக ஆளும் மாநில அரசுகளே காரணம். பாஜக ஆளும் மாநிலங்களிலிந்து தமிழ்நாட்டிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். அதற்காக குரல் கொடுக்காத தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசின் மீது குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.

பாஜக மாநிலத் தலைவர், தனது பொறுப்பை தட்டிக் கழிக்காமல், பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை, தனது பொறுப்பை பயன்படுத்தி தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story