குடும்ப பிரச்சினை: மகன் பேசாததால் தாய் எடுத்த விபரீத முடிவு

புதிய வீடு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் மகன், தாயுடன் பேசாமல் இருந்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சேர்வைக்காரன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஞானக்குமார். இவரது மனைவி சந்திரா (55 வயது). இந்த தம்பதிக்கு சிபி சக்கரவர்த்தி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

சிபி சக்கரவர்த்தி சென்னையில் பணிபுரிந்து வருவதால் அங்கேயே குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சந்திராவுக்கு திடீரென பக்கவாத நோய் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி புதிய வீடு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் தாய் சந்திராவுடன் பேசாமலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மகன் பேசாததால் மனவேதனையில் தவித்த சந்திரா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கடையம் போலீசார் சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்ககு க்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com