அரசு பள்ளியில் தீவிபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் சேதம்


அரசு பள்ளியில் தீவிபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் சேதம்
x
தினத்தந்தி 6 Nov 2025 1:01 AM IST (Updated: 6 Nov 2025 1:03 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அருகே தற்போது செயல்பாட்டில் இல்லாத வகுப்பறை கட்டடத்தின் உள்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் பிற்பகலில் விளையாட்டு மைதானம் அருகே தற்போது செயல்பாட்டில் இல்லாத வகுப்பறை கட்டடத்தின் உள்பகுதியில் இருந்து புகை வருவதாக மாணவர், மாணவிகள் தலைமை ஆசிரியர் தவசிமுத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு மீட்புப் படையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்தில் வகுப்பறையில் இருந்த பாடப்புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள், கணினிகள், மேஜை, நாற்காலி என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மின் இணைப்புகளில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story