மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 29 Jun 2025 4:02 PM IST (Updated: 29 Jun 2025 4:05 PM IST)
t-max-icont-min-icon

கைது செய்யப்பட்ட மீனவர்களை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னை,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில் ,

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும். மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் .

இத்தகைய கைது நடவடிக்கைகள். படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும். நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்ப்படுத்தும் .

எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் . என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story