முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
Published on

சென்னை,

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com