‘தனிக்கட்சி தொடங்குவேன் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை’ - ஓ.பன்னீர்செல்வம்


‘தனிக்கட்சி தொடங்குவேன் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை’ - ஓ.பன்னீர்செல்வம்
x

த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன் தன்னுடன் தொடர்பில் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது;-

“நான் தனிக்கட்சி தொடங்குவேன் என்று எந்த இடத்திலும், ஒருபோதும் சொன்னதில்லை. இது தொடர்பான கேள்விகளை கேட்பதை தவிர்க்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனுடன் நான் தொடர்பில் இல்லை. அவர் என்னிடம் பேசவும் இல்லை, நான் அவரிடம் பேசவும் இல்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story