‘உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு

விளையாட்டு துறையில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி நிறுவனத்தின்(FDDI) பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. ஆனால் நமது ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க, காலணி வணிகத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.
வளர்ந்த நாடுகளுடன் இந்தியா பல வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகிறது. இது வணிகர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். இந்த துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஆதரவு நடவடிக்கைகளை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






