சர்வதேச மகளிர் தினம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி சுற்றிப் பார்க்கலாம்

கோப்புப்படம்
சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச்-8) கொண்டாடப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு
பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி, விட்டுக்கொடுத்தல், உறவுகளை பேணல் என நற்பண்புகள் நிறைந்த தாய்க்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தொல்லியல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் பொதுமக்கள் கட்டணம் இன்றி சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






