மழை நீர் வடியாமல் உயிர்கள் பலியாவதை பார்க்க மனது பதை பதைக்கிறது - தமிழிசை சவுந்தரராஜன்

சரியான கட்டமைப்பு இல்லாததனால் இப்படி எத்தனை அழுகுரல்களை கேட்கப் போகிறோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னையில் மழை வந்தவுடன் சரியான கட்டமைப்பு இல்லாததனால் இப்படி எத்தனை அழுகுரல்களை கேட்கப் போகிறோம் விடியற்காலை துப்புரவு பணிக்குச் சென்ற சகோதரி வரலட்சுமி மழை நீரில் மின்சாரம் பாய்ந்து தன் உயிரை இழந்து இருக்கிறார் அவர் அதிகாலை அந்த இடத்தில் தன் உயிரை தியாகம் செய்து பல பேரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் காலை அந்த மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் அவர் காலை வைக்காவிட்டால் பல பேர் காலை வைத்து உயிரை இழந்து இருப்பார்கள் என்ற கவலை மேலோங்குகிறது.
இந்த திராவிட மாடல் திமுக அரசினால் சீர் செய்யப்படாத இந்த சிங்கார சென்னை எத்தனை பேரை காவு வாங்கப் வாங்க போகிறதோ நான் தமிழக முதல்-அமைச்சரிடமும் ..சென்னை மாநகராட்சி இடமும் வேண்டிக் கேட்டுக் கொள்வது தயவு செய்து சென்னையின் கட்டமைப்பை சரி செய்யுங்கள்.. இந்த மெல்லிய மழைக்கே உயிர்கள் பலி வாங்கப்படுகிறது என்றால்... இன்னுமே பெருவெள்ளத்தில் சென்னை சிக்கினால் எத்தனை உயிர்கள் பலி வாங்கப்படுமோ என்று நினைக்கவே பயமாக இருக்கிறது... தயவு செய்து மக்களை காப்பாற்றுங்கள்
பின்குறிப்பு... நான் இப்படி பதிவு போட்ட உடனேயே உடனே 200 உபிக்கள். . உத்தரபிரதேசத்தில் நடக்கவில்லையா மத்திய பிரதேசத்தில் நடக்கவில்லையா என்று மனிதாபிமானமே இல்லாமல் பதிவிடுவார்கள்.. முதலில் தமிழகத்தில் உள்ள உயிரை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்... விடியலை நோக்கி என்று எவ்வளவு கதை சொன்னீர்கள் என்று இன்று மழை நீர் வடியாமல் விடியற்காலையிலும் உயிர்கள் பலியாவதை பார்க்க மனது பதை பதைக்கிறது.. விளம்பரங்களை விடுத்து. செயலாற்றுங்கள் தமிழக முதல்-அமைச்சரே என தெரிவித்துள்ளார்.






