திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா..!

திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார்.
திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா..!
Published on

சென்னை,

மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் மல்லை சத்யா. கட்சி தலைமைக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட பிரச்சினையால் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து ஆதரவாளர்களுடன் இணைந்து புதிய கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் கட்சி பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதனையடுத்து அண்மையில் செய்தியாளர்களை மல்லை சத்யா, கட்சியின் தொடக்க விழா 20-ந்தேதி (அதாவது இன்று) அடையாறில் நடைபெறும் அன்றைய தினம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி, மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சத்யா நியமனம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தக் கட்சி சுருக்கமாக திவெக என்று அழைக்கப்படும். ஏற்கனவே கட்சியின் கொடி அறிமுகம் செய்ய்யப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள 7 ஸ்டார்களும் 5 திராவிட இயக்க தலைவர்களையும் அகில இந்திய அளவில் டாக்டர் அம்பேத்கர், உலக அளவில் காரல் மார்க்ஸ் ஆகியோரை குறிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நாள்தான் நீதிக்கட்சி உருவாக அடித்தளம் அமைத்த நாள் என்றும் திராவிடர்களுக்கு சேவை செய்ய திராவிட இயக்கங்களால்தான் முடியும் என்றும் புதியக் கட்சி தொடங்கினாலும், தன்னுடைய ஆதரவு திமுக கூட்டணிக்கே என்று மல்லை சத்யா கூறினார்.

ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் நடத்தி வரும் நிலையில், திராவிட வெற்றிக் கழகம் என்று மல்லை சத்யா தொடங்கி இருப்பது தமிழக அரசியல் களத்தில் விவாதமாகி இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com