தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு


தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
x

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தூத்துக்குடி

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு இலந்தைகுளம் பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (54) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் வடக்கு இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த காளிப்பாண்டி (31) என்பவரை கயத்தாறு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கின் விசாரணை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா இன்று (16.04.2025) குற்றவாளி காளிப்பாண்டி என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

1 More update

Next Story