மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
x

நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தென்காசி

சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோட்டத்தில் உள்ள நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (18.12.2025, வியாழன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால், அன்று பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story