`என் மகன், அவன் அப்பா செய்வது போலவே...- ஜாய் கிரிசில்டாவின் புதிய பரபரப்பு பதிவு


``My son, just like his father does...- Joy Grisildas new sensational record
x

ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை,

தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையில், ‘மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும், குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்' என்று ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்.

இதனை மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்தார். ‘நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஒருபோதும் டி.என்.ஏ. பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன்', என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், `என் மகன், அவன் அப்பா செய்வது போலவே விரல்களை மடக்குகிறான். ஒரே ஜீன். உங்களுக்கு இதை விட வேறென்ன டிஎன்ஏ ஆதாரம் வேணும் மிஸ்டர் கணவரே. சிக்கிட்டீங்க'' என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story