வடகிழக்கு பருவமழை: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை


வடகிழக்கு  பருவமழை:  துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
x

பணிகளின் நிலை குறித்து சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம்.

சென்றாண்டு கனமழை நேரத்தின் போது கிடைத்த அனுபவங்கள், அவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வுக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் நிலை குறித்து இக்கூட்டத்தில் கேட்டறிந்தோம்.

மழை நீர் வடிகால்களை சரி செய்வது - கால்வாய்களுக்கான நீர்வழிப்பாதைகளை சீரமைப்பது - முகத்துவாரம் மற்றும் கழிமுகப்பகுதிகளில் நீர் வெளியேறும் வண்ணம் அவற்றை ஆழப்படுத்துவது - சாலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளின் நிலை குறித்து சென்னை மாநகராட்சி - நீர்வளத்துறை - நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து நிறைவு செய்திட வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட்டு பருவமழை நேரத்தில் பாதிப்புகள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டோம். என தெரிவித்தார் .

1 More update

Next Story