ஆழியாறு அணையில் இருந்து 2-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

2,734 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
கோவை,
ஆழியாறு அணையில் இருந்து 2-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை, பொள்ளாச்சி கால்வாய் “ஆ” மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் “அ” மண்டலம் , ஆழியாறு ஊட்டுக் கால்வாய் “ஆ” மண்டலம் மற்றும் சேத்துமடை கால்வாய் “ஆ” மண்டலம் ஆகிய புதிய பாசனப் பகுதிகளுக்கு 02.01.2026 முதல் 17.05.2026 வரை 135 நாட்களுக்கு, உரிய இடைவெளிவிட்டு, ஆழியாறு அணையில் இருந்து 2,142 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மற்றும் சமமட்டக் கால்வாயில் உள்ள மதகு வழியாக 592 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆகமொத்தம் 2,734 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களிலுள்ள 22,332 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






