எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்...!


எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்...!
x

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

சேலம்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில், சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் இன்று அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் எடப்பாடி பழனிசாமிக்கு 'வேல்' பரிசளித்தனர்.

1 More update

Next Story