பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து ஆம்னி பஸ்களில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் பயணம்


பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து ஆம்னி பஸ்களில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் பயணம்
x

பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.

சென்னை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் 18ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். சொந்த வாகனங்கள், ரெயில்கள், அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் என பல்வேறு வாகனங்களில் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து ஆம்னி பஸ்களில் இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரத்து 800 பயணிகள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து கடந்த 9ம் தேதி முதல் இன்று மாலை 5 மணிவரை 2 லட்சத்து 72 ஆயிரத்து 800 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

1 More update

Next Story