பொங்கல்: சொந்த ஊர் செல்ல பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்- ஒரே நாளில் 5½ லட்சம் பேர் பயணம்


பொங்கல்: சொந்த ஊர் செல்ல பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்- ஒரே நாளில் 5½ லட்சம் பேர் பயணம்
x
தினத்தந்தி 15 Jan 2026 6:41 AM IST (Updated: 15 Jan 2026 6:42 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் 5 லட்சத்து 45 ஆயிரத்து 700 பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

சென்னை,

சென்னையில் தங்கியுள்ள வெளியூர்வாசிகள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9-ந் தேதி முதலே சென்னையில் இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். இன்று பொங்கல் பண்டிகை என்பதால் நேற்று, சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

சென்னை எழும்பூர், சென்னை சென்டிரல், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நேற்று கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவில்லா பெட்டிகளில் நிற்கக்கூட இடமின்றி பயணிகள் நிறைந்திருந்தனர். பேருந்துகளும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சீட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை தரையில் அமர்ந்து கூட செல்கிறோம் என்று பயணிகள் டிக்கெட் வாங்கி சென்றதையும் பார்க்க முடிந்தது.

நேற்று ஒரே நாளில் மட்டும் ரெயில்களில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேரும், அரசு பஸ்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரும், தனியார் ஆம்னி பஸ்களில் 60 ஆயிரத்து 700 பேரும், கார்கள், கால் டாக்சிகள், இருசக்கர வாகனங்களில் சுமார் ஒரு லட்சம் பேரும் என மொத்தம் தோராயமாக 5 லட்சத்து 45 ஆயிரத்து 700 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

1 More update

Next Story