ஓ.பன்னீர்செல்வத்துக்கு செங்கோட்டையன் பிறந்தநாள் வாழ்த்து

ஓ.பன்னீர்செல்வம் பூரண உடல்நலத்தோடு, தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான மாண்பிற்கினிய சகோதரர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும், தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






