கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு

ஒரு கிலோ முருங்கைக்காய் 10 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் திடீரென காய்கறி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் நேற்றைய தினம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ், இன்று 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் 10 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் கேரட், தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு ஜனவரி மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






