வைகை அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

திண்டுக்கல் மற்றும் மதுரை வடக்கு வட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில், முதல் போக விவசாயம் செய்வதற்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து 15.06.2025 முதல் 12.10.2025 வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை வட்டம் மற்றும் மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி வட்டம் மற்றும் மதுரை வடக்கு வட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






