விளையாட்டை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது: உதயநிதி ஸ்டாலின்


விளையாட்டை  ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது:  உதயநிதி ஸ்டாலின்
x

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டிஜிட்டல் விளையாட்டுகளை ஒரு போட்டி நிகழ்வாக அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதல்-அமைச்சர் கோப்பை 2025 இல் டிஜிட்டல் விளையாட்டுகளை ஒரு போட்டி நிகழ்வாக அறிமுகப்படுத்தியுள்ளது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான போட்டி நடைபெற்ற பிரத்யேக டிஜிட்டல் விளையாட்டு அரங்கைப் பார்வையிட்டு, வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கினோம்.

தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 5,000க்கும் மேற்பட்ட டிஜிட்டல் விளையாட்டு வீரர்களின் உற்சாகமான பங்கேற்புடன், நமது மாநிலம் இப்போது நாட்டில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் முன்னோடியாக உள்ளது.என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story