தென்காசி: திருமண விழாவையொட்டி நடந்த மதுவிருந்தில் தகராறு - ஒருவர் வெட்டிக் கொலை


தென்காசி: திருமண விழாவையொட்டி நடந்த மதுவிருந்தில் தகராறு - ஒருவர் வெட்டிக் கொலை
x

திருமண விழாவையொட்டி நடந்த மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே, காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்றிரவு நண்பர்களுக்கு மது விருந்து அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, முனியா கணேசன் என்பவருக்கும், பட்டமுத்து என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த முனியா கணேசன், அரிவாளால் பட்டமுத்துவை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தாக்குதலை தடுக்க வந்த பட்டமுத்துவின் நண்பர் அருண்குமார் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இது தொடர்பான புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முனியா கணேசன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story