தென்காசி: அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து - 30 பயணிகள் காயம்

சம்பந்தப்பட்ட சாலையில் பேருந்துகள் அதிவேகத்துடன் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தென்காசி: அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து - 30 பயணிகள் காயம்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-வாசுதேவநல்லூர் சாலையில் அரசு பேருந்து ஒன்று சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கண்டிகைப்பேரி அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட சாலையில் பேருந்துகள் அதிவேகத்துடன் செல்வதாகவும், இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com