அரியலூரில் பயங்கரம்: லாரி விபத்தில் சிக்கியதில் வெடித்து சிதறிய சிலிண்டர்கள்

அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் லாரியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியது.
அரியலூர்,
அரியலூர் வாரணவாசியில் சிலிண்டர்கள் ஏற்றி வரப்பட்ட லாரி விபத்தில் சிக்கியதில் பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக வளைவில் திரும்பும்போது லாரி விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் நிலவியது. இந்த சூழலில் சாலையை முற்றிலுமாக மூடி வாகனங்கள் வேறு சாலைக்கு மாற்றி விடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரி முற்றிலும் எரிந்து நாசமான நிலையில், ஓட்டுநர் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story






