இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Dec 2025 11:58 AM IST
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே அவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
- 30 Dec 2025 11:43 AM IST
1,000 கோல்கள் அடிப்பதே என்னுடைய இலக்கு என ரொனால்டோ தெரிவித்துள்ளார். நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், காயம் ஏதும் ஏற்படாமல் இருந்தால் நிச்சயம் அதை அடைந்து விடுவேன் எனவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
- 30 Dec 2025 11:26 AM IST
டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
1,300 விமானங்களை கையாளும் திறன் கொண்ட டெல்லி விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக இன்று 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 60 விமானங்களின் புறப்பாடு மற்றும் 58 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் விமான சேவை ரத்துசெய்யப்பட்டன. வானிலை சற்று சீரான பிறகு படிப்படியாக விமான சேவைகள் இயக்கப்படும் என டெல்லி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 30 Dec 2025 11:24 AM IST
கோவையில் சர்வதேச ஆக்கி மைதானம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் மைதானத்தில் உதயநிதி ஸ்டாலின் சிறிதுநேரம் ஆக்கி விளையாடினார்.
- 30 Dec 2025 10:45 AM IST
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய மெல்போர்ன் ஆடுகளம் திருப்தியற்றது என நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
- 30 Dec 2025 10:44 AM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் டக் பிரேஸ்வெல் அறிவித்துள்ளார்.
- 30 Dec 2025 10:44 AM IST
‘இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்...’ என நெதன்யாகு சந்திப்பின்போது டிரம்ப் மீண்டும் பேசினார்.
- 30 Dec 2025 9:57 AM IST
இன்றைய தங்கம் விலை:-
இந்த நிலையில், தங்கம், வெள்ளி விலை இன்று 2-வது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், பவுனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை:-
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.258-க்கும், கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து ஒருகிலோ ரூ.2,58,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளியின் விலை போட்டிப்போட்டு உயர்ந்து கொண்டு வந்த நிலையில், விலை குறைந்து வருவது நகை பிரியர்கள், இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.
- 30 Dec 2025 9:29 AM IST
திருத்தணி முருகன் கோவிலுக்கு 3 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை
திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 31-ந்தேதி திருப்படி திருவிழாவும், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு தரிசனமும் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வியாழக்கிழமை வரை 3 நாட்கள் மலைக்கோவில் மேல் ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.













