இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Jan 2026 8:09 PM IST
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Jan 2026 5:05 PM IST
19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Jan 2026 3:11 PM IST
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Jan 2026 3:10 PM IST
ஜனநாயகன் பட விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை திங்களன்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 10 Jan 2026 2:46 PM IST
அசாமில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
திஸ்பூர்,
அசாமின் நல்பாரி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 6.06 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அசாமின் லக்கிம்பூர் பகுதியில் மதியம் 1.30 மணியளவில் ரிக்டரில் 3.5 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
- 10 Jan 2026 1:27 PM IST
- பராசக்தி பார்த்தபின் ரவி மோகன் தோழி கெனிஷா பேட்டி
`ரவிக்காக மட்டும் தான் பராசக்தி ஓடும். என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல. அவருக்காகவே இந்த படம் பண்ண மாதிரி இருக்கு. ஹீரோவா பண்ணா என்ன வில்லனா பண்ணா என்ன.. அவர் தான் நம்பர் 1 இந்த படத்துல.. Second Half-ல அவர தாண்டி படமே இல்ல. அவர் எப்பவுமே Evergreen.. Ever Best ’’














