இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Jan 2026 10:52 AM IST
வனத்துறை முக்கிய அறிவிப்பு
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
- 11 Jan 2026 9:44 AM IST
நாளை டெல்லி செல்லும் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இந்த விசாரணை நாளை காலை 11 மணியளவில் தொடங்குகிறது. இதற்காக நாளை காலை, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார்.
விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொள்ள சிபிஐ திட்டமிட்டுள்ளது. விஜய்யின் பிரசார பேருந்தை நேற்று சென்னையில் இருந்து கரூர் அலுவலகம் எடுத்து சென்ற சிபிஐ அதிகாரிகள், பேருந்தை இயக்கியும் பேருந்தின் மேல் நின்றால் எவ்வளவு தூரம் தெரியும் என்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர்.
பேருந்தின் உயரம், விஜய் நிற்கும் இடம் உள்ளிட்டவற்றையும் அங்குலம் அங்குலமாக டேப் வைத்து அளந்தனர். இந்த சூழலில் விஜய்யிடம் நாளை சிபிஐ அதிகாரிகள் நடத்த இருக்கும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெல்லி செல்லும் விஜய்க்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக்கோரி டெல்லி போலீசாருக்கு தவெக சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.











