இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 July 2025 7:43 PM IST
3வது டெஸ்ட்: இங்கிலாந்து 367 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட் - 104, ப்ரைடன் கார்ஸ் - 56, ஜாமி ஸ்மித் - 51, பென் ஸ்டோக்ஸ் - 44 ரன்கள் எடுத்தனர்.பும்ரா - 5 விக்கெட்டுகள், சிராஜ், நிதீஷ் குமார் தலா 2 விக்கெட்டுகள், ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
- 11 July 2025 6:55 PM IST
முட்டை விலை சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 பைசா சரிந்தது. கொள்முதல் விலை ரூ.5.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் 40 பைசா விலை குறைந்துள்ளது.
- 11 July 2025 6:54 PM IST
"அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை தரப்படும்" - எடப்பாடி பழனிசாமி
திமுக தரும் ரூ.1,000க்கு ஆசை பட்டு நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள். அதிமுக ஆட்சிக்கு பெண்கள் மன நிறைவு பெறும் உதவித்தொகை தரப்படும் என்று விழுப்புரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 11 July 2025 5:18 PM IST
"லோகேஷ் மீது கோபத்தில் உள்ளேன்" - சஞ்சய் தத்
நடிகர் விஜய்யுடன் படம் பண்ணியிருக்கேன், எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மேல் எனக்கு கோபம். லியோ படத்தில் எனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்காமல் என்னை வீணடித்து விட்டார் என்று நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.
- 11 July 2025 4:45 PM IST
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது நாம் துல்லிய தாக்குதல் நடத்தினோம் - அஜித் தோவல்
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்கள் மீது நாம் துல்லிய தாக்குதல் நடத்தினோம். பிரமோஸ் ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் 9 தீவிரவாத இலக்குகளை 23 நிமிடங்களில் தாக்கி அழித்தோம் என சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசினார்.
- 11 July 2025 3:59 PM IST
ஓடும் ரெயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை செய்த நபர் குற்றவாளி என தீர்ப்பு
ஓடும் ரெயிலில் பெண்ணை பாலியல் தொல்லை செய்த நபர் குற்றவாளி என தீர்ப்பளித்தது திருப்பத்தூர் நீதிமன்றம். ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் கர்ப்பிணி ரேவதிக்கு கை, கால் தலையில் படுகாயம் ஏற்பட்டது. கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய ஹேமராஜை குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம். ஹேமராஜ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிந்த நிலையில் குற்றவாளி என நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு வழங்கி உள்ளார். தண்டனை விவரங்கள் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என்று திருப்பத்தூர் நீதிமன்றம் கூறியுள்ளது.
- 11 July 2025 3:56 PM IST
குரூப்-4 வினாத்தாள் கசியவில்லை - டிஎன்பிஎஸ்சி விளக்கம்
"நாளை (ஜூலை 12) நடைபெற உள்ள குரூப்-4 வினாத்தாள் கசியவில்லை. மதுரையில் தனியார் பேருந்தில் குரூப் 4 வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.
- 11 July 2025 3:53 PM IST
ரோப் கார் சேவை இயங்காது
பழனி முருகன் கோயிலில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
- 11 July 2025 2:48 PM IST
நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு
15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
- 11 July 2025 1:54 PM IST
ஒரு நொடிக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிய தமிழ் நடிகை ..யார் தெரியுமா?
சினிமா உலகில் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். பாலிவுட் உலகில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகைகள் பல கோடிகளை சம்பளமாக வாங்குகிறார்கள்.
தென் இந்திய பட நடிகைகளை எடுத்துக்கொண்டால், சாய் பல்லவி, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் லிஸ்டில் முன்னணியில் இருக்கிறார்கள். திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமாகவும் பல முன்னணி நடிகைகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய விளம்பரங்களுக்குக் கூட கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.
















