இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Sept 2025 10:26 AM IST
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் நடவடிக்கை
ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத காரணத்தினால் பாமகவின் செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
- 11 Sept 2025 10:19 AM IST
ஒரே ஆண்டில் சவரனுக்கு ரூ.25 ஆயிரம் உயர்ந்த தங்கம் விலை.. மேலும் அதிகரிக்குமா..?
இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 150-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.140-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 11 Sept 2025 9:44 AM IST
ராமதாஸ் அளித்த கெடு முடிந்தது: அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை?
ராமதாஸ் அளித்த கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் இன்று (வியாழக்கிழமை) அன்புமணி மீது ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 11 Sept 2025 9:38 AM IST
அரசு பஸ்களில் பயன்படுத்தும் இலவச பஸ் பாஸ் ஒரு மாதத்திற்கு கால நீட்டிப்பு
ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழகப் பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- 11 Sept 2025 9:36 AM IST
ஓசூரில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24.307 கோடி முதலீட்டிற்கான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
- 11 Sept 2025 9:32 AM IST
நல்ல நேரம் காலை: 10.45 11.45
ராகு காலம் பிற்பகல்: 1.30 3.00
எமகண்டம் காலை: 6.00 7.30
குளிகை காலை: 9.00 10.30
கௌரி நல்ல நேரம் காலை: 12.15 1.15
கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 7.30
சூலம்: தெற்கு
சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்












