இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025


இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025
x
தினத்தந்தி 15 Sept 2025 8:58 AM IST (Updated: 16 Sept 2025 8:54 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • இன்றே கடைசி நாள்
    15 Sept 2025 9:13 AM IST

    இன்றே கடைசி நாள்

    2024-25ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே (செப். 15) கடைசி நாள்; தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், வட்டியுடன் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் அபராதத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.1,000, அதை தாண்டியிருந்தால் ரூ.5,000 செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம்
    15 Sept 2025 9:13 AM IST

    ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம்

    கடந்த 6ஆம் தேதி டிஜிபி அலுவலகம் முன்பு விசிக-வினரை கத்தியால் தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில், புழல் சிறையில் இருக்கும் புரட்சித் தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு; அதற்கு தேவையான ஆவணங்களை சிறைத்துறைக்கு காவல்துறை ஒப்படைத்துள்ளனர். இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மூர்த்தி மட்டும் கைது செய்யப்பட்டிருந்தார்.

  • எலும்புகளை ஒட்ட வைக்கும் பசை
    15 Sept 2025 9:12 AM IST

    எலும்புகளை ஒட்ட வைக்கும் பசை

    முறிந்த எலும்புகளை, 3 நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எலும்புகள் குணமடைந்ததும் ‘போன்-2’ என்ற இந்த பசை தானாகவே கரைந்துவிடும். சுமார் 150 பேருக்கு இதனை பரிசோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர்.

  • 15 Sept 2025 9:04 AM IST

    இன்றைய ராசிபலன்: 15.09.2025...காதலர்கள் சிந்திப்பது நல்லது

    தம்பதிகள் ஆலயப் பணியில் இணைந்து செயல்படுவீர். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தாங்கள் சந்திக்க வேண்டும் என்பவரை சந்திப்பீர்கள்.ஒரு சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். விரும்பிய துறையில் நீங்கள் கால் பதிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

1 More update

Next Story