இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 Sept 2025 9:27 AM IST
உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார் பெரியார் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள் ஆக தமிழ்நாடு அரசு 2021-ல் அறிவித்திருந்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 17 Sept 2025 9:24 AM IST
தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள்' ஆக தமிழ்நாடு அரசு 2021-ல் அறிவித்திருந்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் குறித்த ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
- 17 Sept 2025 9:23 AM IST
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் 17.09.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
- 17 Sept 2025 9:21 AM IST
கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா: 7 பேருக்கு விருது வழங்குகிறார் மு.க.ஸ்டாலின்
திமுக சார்பில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்தாண்டு முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இவ்விழாவில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார்.
- 17 Sept 2025 9:19 AM IST
இன்றைய ராசிபலன்: 17.09.2025...பெண்களுக்கு விரும்பிய வரன் கிடைக்கும்
ரிஷபம்
நண்பர்களுடன் நல்உறவு மேம்படும். அவசரத்திற்கு உதவுவார்கள். மாணவர்களுக்கு புத்தக வாசிப்பில் ஆர்வம் கூடும். உறவினர்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு தாங்கள் விரும்பியவாறு வரன் கிடைக்கும். பங்குச் சந்தைகளில் பணம் போட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை













