இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 Oct 2025 9:11 AM IST (Updated: 4 Oct 2025 9:01 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • வந்தே பாரத் ரெயில் மோதியதில் 4 பேர் பலி
    3 Oct 2025 8:09 PM IST

    வந்தே பாரத் ரெயில் மோதியதில் 4 பேர் பலி

    பீகார் மாநிலம் பூர்ணியாவில் தண்டவாளத்தை கடக்கும்போது வந்தே பாரத் ரெயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் இருட்டாகவும், பனிமூட்டமாகவும் இருந்ததால் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்துள்ளனர்.

  • நாளை சென்னை - மதுரை இடையே மெமு சிறப்பு ரெயில்
    3 Oct 2025 6:53 PM IST

    நாளை சென்னை - மதுரை இடையே மெமு சிறப்பு ரெயில்

    சென்னை - மதுரை இடையே முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நாளை இயக்கப்படுகிறது. சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

  • தென் மேற்கு பருவமழை இயல்படை விட குறைவு
    3 Oct 2025 6:52 PM IST

    தென் மேற்கு பருவமழை இயல்படை விட குறைவு

    ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பைவிட குறைவாக பதிவாகி உள்ளது. ஜூன் - செப்டம்பர் வரை இயல்பாக 328 மி.மீ மழை பதிவாகும் நிலையில் இம்முறை 326 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  • கைதாகிறாரா புஸ்ஸி?
    3 Oct 2025 6:43 PM IST

    கைதாகிறாரா புஸ்ஸி?

    ஏற்கனவே தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வரும் நிலையில், முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் புஸ்ஸி ஆனந்த் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாயப்பு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

  • நெல்லை - தாம்பரம்; முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்
    3 Oct 2025 6:38 PM IST

    நெல்லை - தாம்பரம்; முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்

    அக்டோபர் 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை - தாம்பரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படும். நெல்லையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 மணிக்கு 18 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5ஆவது நாளாக வன்முறை
    3 Oct 2025 6:36 PM IST

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5ஆவது நாளாக வன்முறை

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5ஆவது நாளாக வன்முறை நீடித்துள்ளது. முசாபராபாத்தில் போராடும் மக்கள் மீது பாக். ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. முசாபராபாத் மனித உரிமை மீறல்கள் - பாக். பொறுப்பேற்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.

  • ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
    3 Oct 2025 6:29 PM IST

    ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

    கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜோதி ராமன் உத்தரவிட்டார்.

  • 3 Oct 2025 6:04 PM IST

    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.880 குறைந்த நிலையில் தற்போது ரூ.480 உயர்ந்துள்ளது கிராம் ரூ.10,900க்கு விற்பனை ஆகிறது.

  • 3 Oct 2025 6:03 PM IST

    ஆயுதப் பூஜை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக அக்.6ம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார ரெயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • 3 Oct 2025 6:02 PM IST

    என் வருகையால் நிகழ்ந்த மரணம் என்றால், அதற்கு காரணம் யாராக இருக்க முடியும்? நான்தானே? ஆனால் கரூர் சம்பவத்தில் ‘வருந்துகிறேன், மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்ற வருத்தம்கூட இல்லாமல்.. அன்று விஜய்க்காக உட்கார்ந்து பேசிய கருத்தாளர்களெல்லாம், விஜய்க்கு ஓட்டுப்போடுவார்களா? என தவெக தலைவர் விஜய்க்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி உள்ளார்.

1 More update

Next Story