இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 Jan 2026 9:43 AM IST
“அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம்..” - நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா உறுதி
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா, "எங்களுக்கு எதிராக உடன் இருந்தே துரோகம் புரிந்துவிட்டனர். அவர்களின் துரோகம் வருங்காலத்தில் வெளிப்படுத்தப்படும். அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம்" என்றார்.
முன்னதாக சுவிஸ் வங்கிகளில் உள்ள நிக்கோலஸ் மதுரோவின் ரூ.90 ஆயிரம் கோடி (10 பில்லியன் டாலர்கள்) சொத்தை முடக்குவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்தது.
- 6 Jan 2026 9:15 AM IST
இன்றைய ராசிபலன் (06.01.2026): உங்களின் நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும் நாள்..!
ரிஷபம்
முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வாக்குத் தொழிலால் லாபம் வந்தடையும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு










