இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 Jan 2026 2:48 PM IST
பாக்.க்கு உளவு பார்த்தவர் கைது
இந்திய விமானப்படை தளங்கள் குறித்த ரகசிய தகவலை பாகிஸ்தானுக்கு முகநூல், வாட்ஸப்பில் அனுப்பிய சுனில் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சுனில் குமாரின் செல்போன் பறிமுதல் செய்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 6 Jan 2026 2:46 PM IST
வெள்ளியா? வெள்ளை உலோகமா?
உபியில் ஓடும் லாரியில் இருந்து சாலையில் சிதறிய வெள்ளை நிற உலோகத்தை `வெள்ளி’ என நினைத்து பொதுமக்கள் பலரும் அதனை வீடுகளுக்கு எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் தீயாக பரவ பொதுமக்கள் வந்துகொண்டே இருந்ததால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, போலீசார் கூட்டத்தை கலைத்து சரி செய்தனர்.
- 6 Jan 2026 2:43 PM IST
இந்து தர்மத்துக்கு எதிரான மனநிலையில் ஸ்டாலின் அரசு இருப்பது நிரூபணமாகியுள்ளது. இந்துக்களுக்கு எதிரான ஒரு நியாயமற்ற அரசாக செயல்படுகிறது திமுக அரசு என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
- 6 Jan 2026 1:57 PM IST
த.வெ.க. தலைவர் விஜய்-க்கு சி.பி.ஐ. சம்மன்
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக வரும் 12-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு த.வெ.க. தலைவர் விஜய்-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
- 6 Jan 2026 1:46 PM IST
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” - எப்போது தெரியுமா..?
தமிழகத்தில் வரும் 9ம் தேதி 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- 6 Jan 2026 1:21 PM IST
திமுக அரசு இனியாவது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
- 6 Jan 2026 1:20 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன்
கொல்கத்தாவில் வாக்குரிமை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர்.படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை என கூறப்படும் நிலையில், உரிய ஆவணங்களுடன் வரும் 9-ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.















