இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-07-2025


தினத்தந்தி 6 July 2025 9:05 AM IST (Updated: 6 July 2025 8:02 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 6 July 2025 9:12 AM IST

    தமிழகத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 6 July 2025 9:08 AM IST

    ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. இதனால், கடைசி நேரத்தில் முன்பதிவு உறுதியாகாத பயணிகள் சிரமத்தை சந்தித்து வந்தனர். எனவே, இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என பயணிகள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து கடந்த மாதம் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அட்டவணை வெளியிடும் நடைமுறையை 4 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரத்திற்கு முன்பு வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, புதிய முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறையை ரெயில்வே வாரியம் வெளியிட்டது.

    அதில், அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கான முன்பதிவு அட்டவணை, முந்தைய நாள் இரவு 9 மணிக்கு தயாரிக்கப்பட வேண்டும். மதியம் 2 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.

    இந்த நடவடிக்கை மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் தங்களுடைய டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். கடைசிநேர சிரமம் தவிர்க்கப்படும் என தெரிவித்தது. இந்த புதிய முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறை தெற்கு ரெயில்வேயில் நேற்று அமலுக்கு வந்தது.

    8 மணி நேரத்திற்கு முன்பே அட்டவணை வெளியிடும் நடைமுறையை பின்பற்றுமாறு ரெயில்வே கோட்டங்களுக்கு தெற்கு ரெயில்வே வணிகப்பிரிவு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

  • 6 July 2025 9:07 AM IST

    சென்னையில் 07.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அரும்பாக்கம்: ஜெய் நகர் 4 முதல் 7 வரை, பிரகதீஸ்வரர் நகர், துரை பிள்ளை தெரு, இந்திரா காந்தி தெரு, கவிதா தெரு, நேரு தெரு மற்றும் நகர், வீணா கார்டன், பி.வி.நகர், புதிய தெரு.

    தாம்பரம்: மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானந்தா நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், தேனுகாம்பாள் நகர், ராகவேந்திரா நகர், கிருஷ்ணா நாகா, அன்சா கார்டன்.

1 More update

Next Story