இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-07-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 July 2025 7:36 PM IST
2வது டெஸ்ட்: 5ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து வெற்றிபெற 455 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆட்டத்தில் இன்னும் 55.3 ஓவர்கள் மீதம் உள்ளன.
- 6 July 2025 6:30 PM IST
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 6 July 2025 5:15 PM IST
2வது டெஸ்ட்: கடைசி நாள் ஆட்டம் தொடக்கம்
இங்கிலாந்து, இந்தியா இடையேயான 2வது டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா வெற்றிபெற 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இங்கிலாந்து வெற்றிபெற 535 ரன்கள் தேவைப்படுவதால் ஆட்டம் சூடுபிடித்துள்ளது.
- 6 July 2025 3:37 PM IST
பாமக நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கப்படவில்லை; ஜூலை 8ம் தேதி நடைபெறவுள்ள பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு அழைப்பு உள்ளதுசெயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம் - பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தகவல்