இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Nov 2025 9:32 AM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா ? இன்று கடைசி ஆட்டம்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
- 8 Nov 2025 9:09 AM IST
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பஸ்கள் செல்லாது: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
தமிழக அரசும், கேரளா அரசும் தலையிட்டு, இரு மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.
- 8 Nov 2025 9:08 AM IST
ராசிபலன் (08.11.2025): நெடுநாள் காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்
மகரம்
இன்றைய நாளில் தாங்கள் வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள். நெடுநாள் காத்திருந்த தங்களுக்கு எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் டிஜிட்டல் மார்கெட்டிங் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா













