இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Jan 2026 10:40 AM IST
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை யு/ஏ சான்றிதழ் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் 9-ந்தேதி (இன்று) திரைக்கு வர இருந்தது. ஆனால் ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழை தணிக்கை வாரியம் இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக பட நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் 9-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை யு/ஏ சான்றிதழ் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 9 Jan 2026 10:18 AM IST
'ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்தில் பாஜவுக்கு தொடர்பு கிடையாது - தமிழிசை சவுந்தரராஜன்
தணிக்கை விவகாரத்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அரசியலாக்குவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
- 9 Jan 2026 10:16 AM IST
செங்கோட்டையனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டி.டி.வி. தினகரன்
மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
- 9 Jan 2026 9:52 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்தியா அணிக்கு பின்னடைவு
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
- 9 Jan 2026 9:49 AM IST
பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
வானியல் ஒரு அரிய நிகழ்வாக சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன், பூமிக்கு அருகே வருகிறது.
- 9 Jan 2026 9:48 AM IST
கிரீன்லாந்து தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டென்மார்க், தனது படைகளை குவித்து வருகிறது.
- 9 Jan 2026 9:46 AM IST
எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சந்திப்பு; தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்தார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக குழு சென்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இடையேயான தொகுதிப்பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முன்னதாக அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 9 Jan 2026 9:44 AM IST
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- 9 Jan 2026 9:43 AM IST
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் பின்வரும் இடங்களில் நாளை மின் தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
- 9 Jan 2026 9:41 AM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
















