இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Jan 2026 9:40 AM IST
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
- 9 Jan 2026 9:33 AM IST
நெதர்லாந்தில் `பராசக்தி' படத்தின் திரையிடல்கள் ரத்து
ஜனநாயகன் படத்தை போலவே, ‘பராசக்தி’ படத்துக்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
- 9 Jan 2026 9:32 AM IST
எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. குழு இன்று சந்திப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேச உள்ளனர். அ.தி.மு.க.-பா.ஜ.க. தொகுதி பங்கீட்டுக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்த உள்ளனர்.
- 9 Jan 2026 9:23 AM IST
‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கில் இன்று தீர்ப்பு
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் இதுவரை வழங்காத நிலையில், ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. மேலும் விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
- 9 Jan 2026 9:21 AM IST
ராசிபலன் (09.01.2026): இன்றைய தினம் உற்சாகமான நாளாக அமையும்..!
ரிஷபம்
வெளி வட்டாரத்தில் செல்வாக்கு பெருகும். பணம் பாக்கெட்டை நிரப்பும். உடல் வலி நீங்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவர். மாணவர்கள் திறன் கூடி தாங்கள் தங்கள் பள்ளியில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாமியாரிடம் அனுசரிப்பது நல்லது. எடுத்த காரியம் வெற்றியடையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்











