இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025


இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
x
தினத்தந்தி 9 April 2025 9:44 AM IST (Updated: 9 April 2025 8:18 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சென்னை


Live Updates

  • 9 April 2025 10:17 AM IST

    ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 6.25%-லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 9 April 2025 10:04 AM IST

    குமரி அனந்தன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிப்பு

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில் குமரி அனந்தனை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்திற்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

  • 9 April 2025 10:00 AM IST

    ஆந்திராவின் பெண்டுர்த்தி அருகே துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஜேஇஇ நுழைவுத்தேர்வை தவறவிட்டதாக 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

  • 9 April 2025 9:59 AM IST

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

1 More update

Next Story