இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 1 Sept 2025 1:07 PM IST
சொகுசு கார்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
ஒடிசாவில் ரூ.1,936 கோடி வங்கி மோசடி புகாரில் Anmol Mines என்ற நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அதில் BMW, AUDI உள்ளிட்ட 10 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் பைக்குகள், ரூ.1.12 கோடி மதிப்புடைய நகைகள், ரூ.13 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 1 Sept 2025 12:46 PM IST
கடலூரில் ZAAROZ என்ற புதிய உணவு டெலிவரி செயலி அறிமுகம்
கடலூர் மாவட்ட ஹோட்டல் சங்கத் தலைவர் ராம்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருந்தகம், காய்கறி, மளிகை , பேக்கரி உள்ளிட்ட 9 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆர்டர் செய்யப்படும் உணவுகள், ஹோட்டலில் என்ன விலைக்கு வழங்கப்படுகிறதோ அதே விலைக்கு டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1 Sept 2025 12:44 PM IST
அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது - அமெரிக்கத் தூதரகம்
அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருவதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் கூறியுள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் எஸ் சி.ஓ மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்று ரஷிய அதிபர் புதினுடன் பேசி வரும் நிலையில், இந்த ட்வீட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- 1 Sept 2025 12:40 PM IST
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
வீராணம் ஏரி இந்த ஆண்டில் 5வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 1 Sept 2025 12:30 PM IST
தினமும் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ஒரு சேனலில் நகைச்சுவை நிகழ்ச்சி, இன்னொரு சேனலில் நடன நிகழ்ச்சி, இன்னொரு சேனலில் பாடல் நிகழ்ச்சி. ஒவ்வொரு நாளும் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
இருப்பினும், இந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சீரியல் நடிகர்கள் மற்றும் 'பிக் பாஸ்' போட்டியாளர்கள் இடம்பெறுகிறார்கள். ஆனால் தெலுங்கு பிக் பாஸில் அதிக புகழ் பெற்ற கீர்த்தி பட், எந்த நிகழ்ச்சிகளிலும் இடம்பெறுவதில்லை.
- 1 Sept 2025 11:57 AM IST
டாஸ்மாக் குடோன் முன்பு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள 80 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபானப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. குப்பைகளை தடுக்க மற்றும் மறுசுழற்சியை எளிதாக்க மதுபாட்டில் வாங்கும் போது கூடுதலாக ரூ.10 செலுத்தி பின்னர் காலி பாட்டிலைக் கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்பப் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இந்த நிலையில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ஓரிக்கை டாஸ்மாக் குடோன் முன்பு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
- 1 Sept 2025 11:54 AM IST
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 600 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்த ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுகங்களால் 600 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கங்களால் குனார் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்கள் முழுமையாக உருக்குலைந்ததாக தலிபான் அரசு தகவல் வெளியாகி உள்ளது. கட்டடங்கள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- 1 Sept 2025 11:42 AM IST
ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். டெட் தேர்வு எழுத விரும்பாதோர் வேலையை விட்டு வெளியேறலாம். அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம். சிறுபான்மை நிறுவனங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திபான்கர் தத்தா அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
- 1 Sept 2025 11:37 AM IST
''வெற்றி என்பது பணமோ புகழோ அல்ல''...- ரகுல் பிரீத் சிங்
பிரபல பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தனது 18 வயதில் 'கில்லி' என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். இது 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் ரீமேக்காகும்
- 1 Sept 2025 11:22 AM IST
5 கடற்கரைப் பகுதிகளில் 77 டன் கழிவுகள் அகற்றம்
விநாயகர் சிலை கரைக்கப்படும் 5 கடற்கரைப் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 77 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.


















