இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Nov 2025 5:37 PM IST
டெல்லி கார் வெடிப்பு - அமித்ஷா ஆலோசனை
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் உள்துறை மந்திரி அமித்ஷா 2ம் கட்டமாக ஆலோசனை மேற்கொண்டார்.
- 11 Nov 2025 5:34 PM IST
ஈசிஆரில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைக்குப்பிறகு புரளி என தெரியவந்தது .
- 11 Nov 2025 5:27 PM IST
பாகிஸ்தானில் கோர்ட்டுக்கு வெளியே குண்டுவெடிப்பு; 12 பேர் பலி
குண்டுவெடிப்பு தொடர்பான உயிரிழப்புகளை, பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் மருத்துவமனை மையம் செய்தியாளர்களிடம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது. முழுவதும் உயரதிகாரிகளுக்கான அரசு அலுவலகங்கள் அமைந்த, பரபரப்பான இந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம், உயர்மட்ட அளவிலான பாதுகாப்பின்மையையே எடுத்து காட்டுகிறது.
இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. எந்தவோர் அமைப்பும் இதற்கு பொறுப்பேற்க முன்வரவில்லை. எனினும், ஆப்கான் தலீபான் மற்றும் இந்தியாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தி உள்ளனர் என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு வட்டாரங்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
- 11 Nov 2025 5:25 PM IST
இந்த வழக்கில் தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நவம்பர்-டிசம்பர் காலங்களில் மழை நிவாரண பணிகளில் அதிகப்படியான அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பார்கள். டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, நிறைய பேர் ஊரில் இருக்க மாட்டார்கள். ஜனவரியில் அறுவடை திருநாளான பொங்கல் வருகிறது. அதனால், தமிழகத்தில் இந்த காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்வது என்பது சரியாக இருக்காது என வாதிட்டார். இந்த வழக்கு, வருகிற 26-ந்தேதி மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 11 Nov 2025 4:11 PM IST
பீகார் 2ம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.40 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 11 Nov 2025 3:48 PM IST
என்.ஐ.ஏ-விடம் ஒப்படைப்பு
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தது மத்திய உள்துறை அமைச்சகம்.
- 11 Nov 2025 3:44 PM IST
பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர்
தமிழக பாஜக இளைஞர் அணித் தலைவர் எஸ்.ஜி.சூர்யா முன்னிலையில், 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்.
- 11 Nov 2025 3:43 PM IST
பயங்கரவாத தாக்குதல் சதி - பெண் டாக்டர் அதிரடி கைது
ஜம்முவில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அரியானாவில் நேற்று கைதான டாக்டர் முசாமில் அகமதுவுடன் தொடர்பில் இருந்ததாக மேலும் ஒரு பெண் டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 11 Nov 2025 3:41 PM IST
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளைத் தொடரலாம் - சுப்ரீம் கோர்ட்டு
எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை தொடரலாம். உயர் நீதிமன்றங்கள் எஸ்.ஐ.ஆர்தொடர்பான மனுக்களை விசாரிக்கக் கூடாது. ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும் என எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 11 Nov 2025 2:38 PM IST
டெல்லி கார் வெடிப்பு - டாக்டர் உமரின் தாயிடம் டிஎன்ஏ சோதனை
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் முகமதுவின் இறப்பை உறுதி செய்ய அவரது தாயிடம் டெல்லி போலீசார் டிஎன்ஏ சோதனை நடத்தியுள்ளனர்.















