இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Feb 2025 8:15 PM IST
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள். எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் நான் மயங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
- 12 Feb 2025 6:22 PM IST
அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள வளாகத்தில் பிரவீன் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட வீரர் பிரவீன் கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார்.
- 12 Feb 2025 6:22 PM IST
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அர்ச்சர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். தலைமை அர்ச்சகரை கோவில் இணைய ஆணையர் ஜோதி தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது. தை பவுர்ணமியையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில் அர்ச்சகர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அர்ச்சர்களுடன் அதிகாரிகள், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
- 12 Feb 2025 5:16 PM IST
செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பேராசிரியர் உயிரிழந்துள்ளார். ஆம்புலன்ஸ் வசதி இல்லையென கூறி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- 12 Feb 2025 4:30 PM IST
ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் என்று தவெக மாநில கொள்கைப்பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் கூறியுள்ளார்.
- 12 Feb 2025 4:28 PM IST
திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சினைக்காக சென்னையில் பேரணி நடத்துவது தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
- 12 Feb 2025 4:18 PM IST
ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்த உறுப்பினராக பிரான்ஸ் ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 Feb 2025 3:50 PM IST
ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- 12 Feb 2025 3:31 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணல் கொள்ளையை தடுத்த தவறிய சாத்தூர் தாசில்தார் உள்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.






