இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 March 2025 5:05 PM IST
தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று 28 பந்துகளில் சதம் அடித்து ஏ.பி. டிவில்லியர்ஸ் அசத்தியுள்ளார்.
- 12 March 2025 4:23 PM IST
ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் நீர்சறுக்கு விளையாட சென்ற 37 வயதான நபர் சுறா தாக்கி பலியானார்.
- 12 March 2025 4:22 PM IST
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், மாசி மகத்தை முன்னிட்டு கோவில் குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது. குளத்தில் யாரும் இறங்க அனுமதிக்கப்படாததால் குளத்து நீர் அனைவருக்கும் தெளிக்கப்பட்டது.
- 12 March 2025 4:07 PM IST
மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்.
- 12 March 2025 4:02 PM IST
உலகளாவிய தெற்கு பகுதிக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான பெரிய தொலைநோக்கு பார்வையை பிரதமர் மோடி மொரீசியஸில் இருந்து இன்று வெளியிட்டார்.
- 12 March 2025 3:59 PM IST
மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் இன்று உறுதி செய்யப்பட்டன.
- 12 March 2025 3:52 PM IST
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக மார்ச் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- 12 March 2025 3:39 PM IST
பூஜை போடும் போது புதிய காரை தந்தை இயக்கியதும் தானாக கண்ணாடி மூடியதால் வெளியே எட்டி பார்த்து கொண்டிருந்த குழந்தை கழுத்து சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
- 12 March 2025 3:38 PM IST
மனிதர்கள் போல (ChatGPT)சாட்ஜிபிடி-யும், பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் என ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இஸ்ரேலை சேர்ந்த ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் தகவல்
- 12 March 2025 3:07 PM IST
ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது ஜியோ. ஸ்டார்லிங்குடன் இணைந்து அதிவேக இணைய சேவையை இந்தியாவுக்கு வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.






